காரைக்குடி ஆச்சி என பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் செல்லூர் ராஜூ

 

காரைக்குடி ஆச்சி பற்றிய கருத்துக்கு நகரத்தார் சமூகத்திடம் வருத்தம் தெரிவிப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர்  பகுதியில் 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜையை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், நடிகர் ரஜினியால் காரைக்குடி ஆச்சியைத் தான் பிடிக்க முடியும் என்று கூறியது பற்றி கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அவர், நடிகர் ரஜினி சினிமாவில் மனோமராவுடன் இணைந்து நடித்துள்ளதை வைத்து அப்படி குறிப்பிட்டதாகவும், நகரத்தாரை குறிப்பிட்டு கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூறினார். அவர்கள் மனம் புண்பட்டு இருக்குமேயானால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் செல்லூர் ராஜூ கூறினார்.

 

Related Posts