கார்ப்பரேட் வரி குறைப்பு உதவும் : ரிசர்வ் வங்கி ஆளுநர்

கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை மூலம், அன்னிய முதலீட்டுக்கு ஏற்றமாநிலமாக இந்தியா மாறியுள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கார்ப்பரேட் வரி குறைப்பு மத்திய அரசின் தைரியமான முடிவு என்றும், இதன் மூலம் அன்னிய மூதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியா மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் பண கையிருப்பு அதிக அளவு இருக்கும் என்று கூறிய அவர், அதனை அவர்கள் மூலதனத்துக்கு பயன்படுத்த முடியும் என தெரிவித்தார். நிலுவை கடனை தீர்த்துக்கொள்ளவும், நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை பலப்படுத்திக் கொள்ளவும் கார்ப்பரேட் வரி குறைப்பு உதவும் எனவும் சக்தி கந்ததாஸ் நம்பிக்கை வெளியிட்டார்.

Related Posts