கார் ஆட்டோ பயணம் கட்டணங்கள் உயரும் அபாயம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் வாடகைக் கார், ஆட்டோ கட்டணங்கள், விமான பயணக் கட்டணங்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 20 சதவிகிதம் விலை அதிகரித்துள்ளது. Brent கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 71 புள்ளி 57 என்ற உச்சத்தை தொட்டு, பின்னர் 68 டாலராக குறைந்தது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால், அதன் எதிரொலியாக வாடகைக் கார், ஆட்டோ, விமான பயணம் உள்ளிட்ட கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளன. சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில், கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியை சவுதி அரசு நிறுத்தி வைத்திருப்பதே விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Related Posts