காற்று மாசுக் காரணமாக உலகம் முழுவதும் 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் உயிரிழப்பு

காற்று மாசுக் காரணமாக உலகம் முழுவதும் 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி : மே-02

கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் நான்காயிரத்து 300 நகரங்களில், PM 2.5 மற்றும் PM 10 காரிய துகள்களின் அளவுகள் கண்காணிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ள பட்டியலில் உலக அளவில் மாசு மிக்க நகரங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர், முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஃபரிதாபாத், ஃகயா, பாட்னா, வாரணாசி, லக்னோ, ஆக்ரா, டெல்லி, ஸ்ரீநகர், முஸாபர்நகர், பட்டியாலா, குர்கான், ஜோத்பூர், குவாலியர் ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. உலகில் 90 சதவீத மக்கள் மாசு மிகுந்த காற்றையே சுவாசிப்பதாகவும், ஆண்டுதோறும் காற்று மாசு காரணமாக 70 லட்சம் மக்கள் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

Related Posts