விளையாட்டு

காற்று மாசுபாட்டால் போட்டியை நிறுத்தமுடியாது : சவுரவ் கங்குலி

இந்தியா – வங்கதேசம் இடையே முதலாவது 20 ஓவர் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. ஆனால் அங்கு நிலவும் அபாயகரமான காற்று மாசுபாட்டால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுப்பியது. இந்திய வீர ர்கள் எந்த முகக் கவசமும் இல்லாமல் பயிற்சி எடுத்த நிலையில், வங்கதேச அணி வீரர்கள் மாஸ்க் அணிந்து பயிற்சியில் ஈடுபட்டனர். காற்று மாசு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து பேசிய சவுரவ் கங்குலி கடைசி நேரத்தில் போட்டியை நிறுத்தமுடியாது எனக் கூறினார். போட்டியில் பங்கேற்க இரு அணி வீரர்களும் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் எனத் தெரிவித்தார்.

Tags
Show More

Related News

Back to top button
Close