காலமான எழுத்தாளர் பாலகுமாரனின் உடல் தகனம் செய்யப்பட்டது

சென்னையில் காலமான எழுத்தாளர் பாலகுமாரனின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

சென்னை : மே-16

இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்ற நாவலாசிரியர் பாலகுமாரன், சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகுமாரன் நேற்று பிற்பகல் காலமானார். மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாலகுமாரனின் உடலுக்கு, அமைச்சர் பாண்டியராஜன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதேபோல், நடிகர்கள் பார்த்திபன், ராஜ்கிரண், சிவகார்த்திகேயன், எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, பாலகுமாரனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இன்று காலை 10.30 மணியளவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Related Posts