காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை  தமிழக  மீனவர்கள் தொடங்கியுள்ளனர்

டீசல் விலையை குறைக்க வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை  தமிழக  மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.

            டீசல் விலையை குறைக்க வேண்டும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததால் சேதமடைந்த  மீனவர்களின் படகுகளை சீரமைக்க நிதி உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 3ந் தேதி முதல்  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வது என கடந்த 30-ந் தேதி நடைபெற்ற தமிழக  மீனவர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி  ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி ரூபாய் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், வரும் 8-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts