காலா போன்ற காளான்கள் காணாமல் போகும்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

 

 

நடிகர் ரஜினியின் புதிய படப்பாடலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார்காலா போன்ற காளான்கள் காணாமல் போகும் என விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து குடிமைப்பணிகள் தேர்வுகல் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா சென்னையில் நடபெற்றது. தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கம் போல திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை விமர்சித்துவிட்டுநடிகர் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தார். இவ்வளவு காலம் திரைத்துறையில் இருக்கும் நடிகர் ரஜினி, எம்ஜிஆர் போல சீர்திருத்தும் கருத்தை கூறினாரா என்று கேள்வி எழுப்பினார். மேலும் காலா போன்ற காளான்கள் காணாமல் போய்விடும் என்றும் அவர் தெரிவித்தார்.காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்றுக்கொள்ளாது  என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 

Related Posts