காலியாக உள்ள 4 மக்களவை தொகுதிகள், 10 மாநிலங்களில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல்

காலியாக உள்ள 4 மக்களவை தொகுதிகள், 10 மாநிலங்களில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா : மே-28

மகாராஷ்டிரா மாநிலம் பல்கர், பந்தாரா – கோண்டியா, உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா மற்றும் நாகலாந்து ஆகிய 4 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் நாகலாந்து தவிர 3 தொகுதிகளும் பாஜக வசமிருந்தவை என்பது, குறிப்பிடத்தக்கது. இதேபோல், ஜார்கண்ட் மாநிலத்தில் 2 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், மேகலாயா, பீகார், உத்தரகாண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு சட்டப்பேரவை தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், தேர்தல் ரத்து செய்யப்பட்ட கர்நாடக மாநிலத்தின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 31–ந்தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Related Posts