காவல்துறை அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

கோவை ரயில் நிலையம் அருகே காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

கோவை : மே-17

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னையில் இருந்து சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோவை ரயில் நிலையம் அருகே காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். பின்னர் காவல்துறை அருங்காட்சியகத்தில் உள்ள நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகள், ராணுவ தளவாடங்கள், டாங்கிகள் போன்ற பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டப்பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில், பலத்த பாதுகாப்புடன் இந்த அருங்காட்சியகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் இருந்து பல்வேறு பகுதிக்குச் செல்லக் கூடிய விமானங்களுக்கு எரிபொருள் சலுகை அளிப்பதன் மூலம் பல்வேறு நகரங்கள் விமான சேவை பெற முடியும் என்று தெரிவித்தார்.

Related Posts