காவல்துறை ஊழியர்களுக்கு தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது

காவல் துறையில் பணியாற்றக்கூடியவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் தபால் மூலம் அவர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஆறு நாடாளுமன்ற தொகுதிகளுக்கு காவலர்களுக்கான தபால் வாக்குப் பதிவு இன்று தொடங்கியது.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றக்கூடிய காவலர்கள் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குபதிவு ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கான முதற்கட்ட தபால் வாக்குப்பதிவு இன்று எழும்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வருகிறது.

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தாமதத்தால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப் பதிவு 9 மணிக்கு துவங்கியது. அதேபோன்று வட சென்னையில் ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 16 ஆயிரம் காவல் துறை ஊழியர்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts