காவல்துறை தமிழகத்திற்கு காவலாக உள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 

 

காவல்துறை தமிழகத்திற்கு காவலாக உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.   

சென்னை, ஏப்ரல்-04

சென்னை எழும்பூரில் காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறந்த காவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் பதக்கங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் குற்ற நிகழ்வுகளை தடுப்பதில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது என பாராட்டினார். காவல்துறை தமிழகத்திற்கு காவலாக உள்ளது என குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பணியின்போது காவல்துறையினருக்கு எந்த குறுக்கீடும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

Related Posts