காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

ரவுடிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக காவல் உதவி ஆய்வாளர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் காமராஜர் சாலை ஓரத்தில் ரவுடிகள் சிலர் கும்பலாக கூடி மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் அவர்களை கண்டித்துள்ளார். இதையடுத்து அந்த கும்பல் அவரை தாக்க முயற்சித்துள்ளது. இதனால் பதற்றமான உதவி ஆய்வாளர், அவர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். திடீரென வானத்தில் துப்பாக்கி சுடும் சத்தாம் கேட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயற்சித்த குற்றத்திற்காக ரவுடி ராஜகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Posts