காவிரிக்காக கமல் கூட்டும் கூட்டத்தில் நல்லக்கண்ணு பங்கேற்கமாட்டார்

காவிரிக்காக கமல் கூட்டும் கூட்டத்தில் நல்லக்கண்ணு பங்கேற்கமாட்டார் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை : மே-15

காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதற்காக அனைத்து விவசாய அமைப்புகளுடன் சென்னையில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற கூட்டம் மே 19- ம் தேதி நடைபெறும் என கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்நிலையில், கமலஹாசன் அறிவிப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் விவசாய சங்கங்களின் சார்பில் வரும் 19 ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கமல்ஹாசன் கூட்டவுள்ள மாநாட்டில் பங்கேற்கவோ, தலைமை ஏற்கவோ ஆர். நல்லகண்ணுவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதாக முத்தரசன் கூறியுள்ளார்.

Related Posts