காவிரியின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்ட பிரதமர் பச்சைக்கொடி காட்டிவிட்டார்

காவிரியின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசுக்கு பிரதமர் மோடி பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகார் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் : மே-12

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ வாகன பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய  அவர், ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு , நீயூட்னோ, ஸ்டேர்லைட் திட்டங்களை தடுக்க மக்கள் அனைவரும் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் காவிரியின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசுக்கு பிரதமர் மோடி பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்றும் வைகோ குற்றஞ்சாட்டினார்.

காவிரியில் கர்நாடகம் புதிய இரண்டு அணைகளை கட்டினால் தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

Related Posts