காவிரி ஆற்றின் குறுக்கே கரூரில் தடுப்பணை கட்டப்படும் : முதலமைச்சர்

காவிரி ஆற்றின் குறுக்கே கரூரில் தடுப்பணை கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டமான சேலத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதன் ஒருபகுதியாக மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி பகுதிகளில் சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களுக்கான காரணங்களும் எடுத்துக் கூறப்படும் என்றும் தெரிவித்தார்.காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது குறித்து அரசு ஆலசோனை நடத்தி வருவதாகவும், காவிரி உபரி நீரை சேமிக்க கரூரில் முதல் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அப்போது, திமுக ஆட்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டது என கேள்வி எழுப்பிய அவர், அரசு மீது குறைசொல்வதை மட்டும் திமுக வாடிக்கையாக வைத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்தார்.

Related Posts