காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் குமாரசாமி நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவது தொடர்பாக பிரதமரை சந்திக்க, கர்நாடக முதல்வர் குமாரசாமி,அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று டெல்லி சென்றார். பிரதமர் மோடியை நேரில் சந்திந்த, குமாரசாமி உள்ளிட்டோர், மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். பேச்சுவார்த்தையின் போது, மத்திய அரசின் பிரதிநிதிகள், தமிழக மற்றும் கர்நாடக அரசின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேகதாது பகுதியில்  அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்கக் கூடாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, கடிதம் எழுதியிருந்த நிலையில்,  குமாரசாமி, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமரை நேரில் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது

Related Posts