காவிரி கரையோர மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியுள்ள நிலையில், காவிரி கரையோர மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இரண்டாவது முறையாக நேற்று மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டியது. நேற்று இரவு 40 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக அணைக்கு நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையில் இருந்து 37 ஆயிரத்து 900 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 11 நாட்களுக்கு பிறகு, 16 கண் உபரி நீர் போக்கி வழியாக மீண்டும் நீர் திறக்கப்பட்டுள்ளது.

நீர் திறப்பு அதிகரிக்கப் பட்டுள்ளதால், சுரங்க மின் நிலையங்களில் முழுஅளவான 250 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனிடையே ஈரோடு மாவட்டம் பவானி சுற்றுவட்டார பகுதியில் காவிரி கரையோர மக்களுக்கு வருவாய் துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடபட்டு வருகிறது. நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, குதிரைக்கல் பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Posts