காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு : வீணாகும் தண்ணீர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீர் வீணாக வெளியேறியது.

மணப்பாறை அடுத்த காவல்காரன்பட்டி வழியாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் அந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதை அடுத்து சுமார் பத்து அடி உயரத்திற்கு தண்ணீர் பீரிட்டுக் கொண்டு வெளியேறியது.

இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் தண்ணீருக்காக திண்டாடி வரும் நிலையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியதால்  அப்பகுதி மக்கள் கவலை அடைந்தனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டது.

Related Posts