காவிரி நதி நீர் பங்கீடு வரைவு திட்டத்தை மத்திய அரசு தயாரித்து விட்டதாக தகவல்

Want create site? Find Free WordPress Themes and plugins.

 

 

உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி காவிரி நதி நீர் பங்கீட்டுக்கு வரைவுத் திட்டத்தை மத்திய அரசு  தயாரித்து விட்டதாக நீர்வளத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி, மே-01 

காவிரி நீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்றம் விதித்த இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ஸ்கீம்என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அப்போது மே 3 –ஆம் தேதியன்று காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டம் ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. அதன் படி காவிரி நதிநீர் பங்கீட்டு வரைவுத் திட்டத்தை மத்திய அரசு  தயாரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரைவு திட்டத்தின் முழு விபரங்களும் மத்திய அமைச்சரவையிடம் விரைவில் ஒப்படைக்கப்படும்  என்றும் காவிரி மேலாண்மை வாரியம் மொத்தம் 9 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லது நதிநீர் தொழில்நுட்ப நிபுணர் பொறுப்பு வகிப்பார் என்றும் 9 உறுப்பினர்களில் தலைவர்  உள்பட 5 பேர் நிரந்தர உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்றும் மத்திய நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 4 உறுப்பினர்களும் பகுதி நேர உறுப்பினர்களாகவும், அந்த 4 உறுப்பினர்களும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்றும் தெரிகிறது. பகுதி நேர உறுப்பினர்கள் ஆண்டுதோறும் மாறிக்கொண்டே இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. வரைவு திட்டத்தை மத்திய நீர்வள அமைச்சகம் தயாரித்தாலும், அதை அமல்படுத்தும் முழு பொறுப்பையும் உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts