காவிரி பிரச்சினையில் பாஜக – காங்கிரஸ் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்

காவிரி பிரச்சினையில் பாஜக – காங்கிரஸ் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை : ஏப்ரல்-08

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், பாஜக வெற்றி பெற்றால் காவிரி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று எடியூரப்பா உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டியதில்லை என்று ராகுல்காந்தி தெரிவித்திருப்பதாக கூறிய பொன். ராதாகிருஷ்ணன், இதன் மூலம் காவிரி பிரச்சினையில் பாஜக – காங்கிரஸ் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Posts