காவிரி போராட்டங்களை தடுக்க நினைத்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்: வைகோ எச்சரிக்கை

காவிரி போராட்டங்களை தடுக்க நினைத்தால், தமிழக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை தேர்வீதி உலா , பேரளம் ராஜரிஷி 125 ஆம் ஆண்டு குரு பூஜை, முனைவர் க.ராவணன் 50 ஆவது பிறந்தநாள் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

முன்னதாக காவிரி பிரச்சனை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காவிரி வழக்கில் தமிழகத்துக்கு நீதி கிடைக்காது என்று கூறினார். தலைமை நீதிபதி மற்றும் தலைமை வழக்கறிஞருக்கு தமிழகம் மீது அக்கறை இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தில்  உள்ள விளைநிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கும் பணியில் மத்திய,மாநில அரசுகள்  ஈடுபட்டு வருகின்றன என்றும் அவர் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காவிரி போராட்டங்களை தடுக்க நினைத்தால், தமிழக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரித்தார்.

Related Posts