காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும்

 

 

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான முழு அதிகாரங்களையும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வழங்க வேண்டும் என சென்னையில் திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பு குறித்து ஆலோசிப்பதற்காக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்..திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், அனைத்து கட்சி கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின், குறுவை சாகுபடியை காப்பாற்ற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

Related Posts