காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க உச்சநிதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசு கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை உச்சநிதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன. இதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் இடைக்கால தலைவராக  மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் உள்ளார். இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts