காவிரி வரைவுத்திட்டம் உச்சநீதிமன்றத்தில் நாளை தாக்கல்

 

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வரைவுத்திட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் நாளை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.  

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, காவிரி தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நாளை காவிரி வாரியம் தொடர்பான வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என கண்டிப்புடன் உத்தரவிட்டனர். கர்நாடக தேர்தலை காரணங்காட்டி, காவிரி வரைவு திட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு, மேலும் மேலும் மத்திய அரசு அவகாசம் கோரி வந்தது. நேற்று, கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவடைந்த நிலையில், நாளை காவிரி வழக்கு விசாரணைக்கு வரும்போது, வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, காவிரி வழக்கில் இறுதி உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Related Posts