காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைத்துக்கட்சி ஆலோசனை

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக திமுக சார்பில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

சென்னை : மே-22

காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அதிகாரங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக திமுக சார்பில், அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.  காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts