காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என நம்பிக்கை

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லி : மே-02

மாகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்த அனைத்து மாநில முதலமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக அரசு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என உறுதியாக நம்புவதாக தெரிவித்தார். மேலும், பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அவரிடம் வலியுறுத்துவேன் என்று அவர் கூறினார்.

Related Posts