காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கப்போவதில்லை

கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கப்போவதில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-14

சென்னை விமான நிலையத்தில்  இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வரைவு அறிக்கை  நடுவர்மன்றத் தீர்ப்பில் கூறியது போல அதிகாரம் நிறைந்த அமைப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்திற்கான நியாயமும் உரிமையும் கிடைக்கபோவதில்லை எனவும் வைகோ கூறினார்.

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை திமுக தலைமையில் நடைபெறும் தோழமைக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

Related Posts