காவிரி விவகாரம்: மே 8ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சிக்கூட்டம்

 

 

காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக,  வருகிற 8ம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாதமம் செய்து வருவதால், அதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 8-ம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், காவிரி விவகாரம் குறித்தும், அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts