காவி அணிந்த பாஜகவினர்,வெள்ளை உடை அணிவதாக; கரு. பழனியப்பன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  8 வழிச்சாலைதொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆளும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும்,தேர்தலுக்கு பிறகு 8 வழிச்சாலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஆளும் அதிமுக அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் உறுதிபட தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் கேள்வி கேட்கமுடியும் என்ற அவர்,  பாஜக வை எதிர்த்து பேச அனைத்து தரப்பினரும் அச்சப்படுவதாகதெரிவித்தார்., தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் என்று ஹெச். ராஜாவிற்கு இரண்டு முகம் உள்ளது என்றும், காவி உடை அணிந்த பாஜகவினர், தேர்தலுக்காக வெள்ளை உடை அணிவதாகவும் கரு. பழனியப்பன் விமர்சித்தார்.

Related Posts