காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கருணாநிதி வீடு திரும்பினார்

 

 

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற திமுக தலைவர் கருணாநிதி, இன்று மாலை வீடு திரும்பினார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி, வயது முதிர்வின் காரணமாகவும், உடல்நலக் குறைபாட்டின் காரணமாகவும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, சென்னை  கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு, சென்னை காவேரி மருத்துவமனையில், செயற்கை சுவாச குழாய் பொருத்தப்பட்டது. இந்நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக திமுக தலைவர் கருணாநிதி, இன்றுகாலை சென்னை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நான்காவது முறையாக டிரக்கியாஸ்டமி கருவி மாற்றிப் பொருத்தப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் கலைஞர் கருணாநிதி மாலை 4 மணியளவில் வீடு திரும்பினார்.

Related Posts