காஷ்மீரில் கற்கள் வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் சென்னை இளைஞர் பலி

 

காஷ்முரில் வன்முறைக் கும்பல் கற்களை வீசி நடத்தியத் தாக்குதலில், உயிரிழந்த சென்னை  இளைஞர் திருமணியின் உடல் இன்று விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது..

 ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அருகே திடீரென வன்முறையில் ஈடுபட்ட கும்பல் ஒன்று அவ்வழியே வந்தோர் மீது கற்களை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த சென்னை  ஆவடி அருகே பாலவேடு பகுதியைச் சேர்ந்த ஆர். திருமணி என்ற இளைஞரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் காஷ்மீரின் ஹன்டுவாரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, சௌராவில் உள்ள மருத்துவமனைக்கு திருமணி கொண்டு செல்லப்பட்டு,அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முப்தி மருத்துவமனைக்கு சென்று அந்த இளைஞரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர். இந்தச் சம்பவத்தால் தாம் வெட்கி தலைகுனிவதாக கூறினார்.

Related Posts