காஷ்மீரில் கல்வீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த சென்னை இளைஞர் திருமணியின் உடல் அடக்கம்

 

 

காஷ்மீரில் போராட்டக்காரர்களின் கல்வீச்சில் உயிரிழந்த சென்னை இளைஞர் திருமணியின் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை ஆவடி அடுத்த பாலவேட்டைச் சேர்ந்த ராஜ்வேலு,  தனது குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தார். கடந்த 7-ம் தேதி குல்மார்க் என்ற இடத்தை சுற்றிப் பார்க்கச் சென்றபோது, அங்கு போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் வெடித்தது. அப்போது வாகனங்கள் மீது வன்முறைக்கும்பல் கல்வீசித் தாக்கியதில், ராஜ்வேலுவின் மகன் திருமணி செல்வம் படுகாயமடைந்து உயிரிழந்தார். உயிரிழந்த திருமணியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து வாகனம் மூலம் பாலவேட்டில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை திருமணியின் உடலுக்கு, திருவள்ளூர் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால்,  மனித நேய ஜனநாயக மக்கள் கட்சிதலைவர் தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, இளைஞர் திருமணியின் உடல் உறவினர்களின் இறுதி மரியாதைக்குப் பிறகு, நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Posts