காஷ்மீரை இந்தியா உடன் முழுமையாக இணைத்தவர் பிரதமர் மோடி

காஷ்மீரை இந்தியா உடன் முழுமையாக இணைத்தவர் பிரதமர் மோடி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இந்தியக் காவல்பணி அதிகாரிகள் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்தப் பயிற்சி மையத்தில் இந்தியக் காவல் பணி அதிகாரிகள் 92 பேரும், வெளிநாடுகளைச் சேர்ந்த 11பேரும் இந்த ஆண்டு பயிற்சியை முடித்துள்ளனர்.

பயிற்சி முடித்துப் பணிக்குச் செல்லும் இவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விழாவில் பங்கேற்றுப் பயிற்சி முடித்த காவல் அதிகாரிகளின் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, சர்தார் வல்லபாய் படேல் 630 தனித்தனி பிரதேசங்களை இந்தியா உடன் இணைத்தார். சர்தார் வல்லபாய் படேலால் காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் இணைக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Related Posts