காஷ்மீர் எல்லையில் 5 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொலை: இந்திய ராணுவம் பதிலடி

 

 

காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானைச் சேர்ந்த 5 வீரர்களை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது.

ஏப்ரல்-24 

காஷ்மீரின் எல்லையோரத்தில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் சிறிய ரக மோட்டார் குண்டுகள் மூலம் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதுதவிர சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் மூலமாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்துள்ள திக்வார் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த சண்டையில், பாகிஸ்தானைச் சேர்ந்த  5 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதுடன், பாகிஸ்தான் ராணுவ முகாம்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கு தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts