காஷ்மீர் துப்பாக்கிச் சண்டை: 3 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள குல்காம் மாவட்டத்தில் நேற்று  தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ராணுவத்தினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சண்டை நடந்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் 5 பேரும் உயிரிழந்தனர்.

இதனிடையே நேற்றிரவு அவந்திப்புரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts