காஷ்மீரில் நிலச்சரிவு – சிறுமி உள்பட 11 பேர் பலி

காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் குலாப்கார்க் என்ற இடத்தில் மச்சாயில் மாதா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உதம்பூர் மாவட்டத்தில் இருந்து சிலர்  வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
டிராப்சல்லா என்ற இடத்தில்  வாகனம் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது பெரிய கற்கள் மற்றும் மண் சரிந்து அந்த வாகனத்தின் மீது விழுந்தது.
இதில் வேன் நசுங்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  இறந்தனர்.  படுகாயம் அடைந்த 9 பேர் கிஸ்த்வாரில் உள்ள  மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.   சிகிச்சை பலனின்றி  சிறுமி உள்பட  7  பேர் உயிரிழந்தனர்.  இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை  11 ஆக உயர்ந்தது.

Related Posts