காஷ்மீர் பிரச்சனை பன்னாட்டுப் பிரச்சனையாக உருவெடுக்கும் : வைகோ

காஷ்மீர் பிரச்சனை பன்னாட்டுப் பிரச்சனையாக உருவெடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

காஷ்மீர் பிரச்சனை குறித்து பரூக் அப்துல்லா “வீட்டுச் சிறையில் வைக்கவில்லை என்றால் ஏன் பூட்டிவைக்கிறார்கள் என் கேள்வி எழுப்பினார். காஷ்மீர் பிரச்சனை பன்னாட்டுப் பிரச்சனையாக உருவெடுக்கும் என்று தெரிவித்த அவர், காஷ்மீர் பிரச்சனையில்  காங்கிரஸ், பிஜேபி இருவரும் குற்றவாளிகள் என்று தெரிவித்தார்.  கலைஞர் நினைவு நாள் குறித்து பேசிய அவர், கலைஞர் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

 

Related Posts