காஷ்மீர் பிரச்சினை அனைத்துலக நாடுகளின் பிரச்சினை : வைகோ

காஷ்மீர் பிரச்சினை அனைத்துலக நாடுகளின் பிரச்சினையாகிவிட்டதாக மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக கிருஷ்ணகிரி மாவட்ட மறைந்த நிர்வாகிகளின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தலைமையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறைந்த நிர்வாகிகளின் திருவுருவ படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது நிர்வாகிகளிடம் பேசிய வைகோ, தமது மாத ஊதியத்தை கட்சியின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்ப எழுதி  கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் பிரச்சினை இனி உள்நாட்டு பிரச்சினையல்ல எனவும், அனைத்துலக நாடுகளின் பிரச்சினையாகிவிட்டதாக தெரிவித்தார்.

 

Related Posts