காஷ்மீர் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்

காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க சீனா நிச்சயம் ஆதரவாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில், இரு நாடுகளும், காஷ்மீர் தொடர்பான பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர். இதனிடையே, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் ஜெனிவாவில் இன்று தொடங்கி, வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. காஷ்மீர் பிரச்னை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் நடக்கும் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னை குறித்து குரல் எழுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

Related Posts