காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா கதவை உடைத்துக் கொண்டு செய்தியாளர்களை சந்திப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா கதவை உடைத்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். முன்னதாக, இரவோடு இரவாக காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

பின்னர், அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என செய்தி வெளியானது.

நாடாளுமன்ற மக்களவையில் இவ்விவகாரம் எதிரொலித்தபோது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தாங்கள் யாரையும் சிறை வைக்கவில்லை என்றும் அவரவர்களின் விருப்பப்படி வீடுகளில் உள்ளனர் என தெரிவித்தார்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா கதவை உடைத்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பாராளுமன்றத்தில் அமித் ஷா தெரிவித்ததுபோல், சுதந்திரமாக தன் விருப்பம்போல் தான் வீட்டில் அடைந்து கிடக்கவில்லை என்றும் தன் வீட்டு வாசலில் போலீஸ் டி.எஸ்.பி. ஒருவர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

இப்போதுகூட தான் கதவை உடைத்துக் கொண்டுதான் உங்களை சந்தித்து பேச வந்திருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரையும் லடாக்கையும் பிரித்து விட்டனர். ஆனால், இதயங்களை பிரிக்க முடியுமா? இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்துவிட முடியுமா?  என அவர் கேள்வி எழுப்பினார்.

தன்னுடைய இந்தியா மதச்சார்பற்ற, ஒருமைப்பாட்டு உணர்வு கொண்ட அனைவருக்குமான நாடு என்று தான் நினைத்திருந்த்தாகவும், இதற்காக கடந்த 70 ஆண்டுகளாக போராடிய தாங்கள் இன்று குற்றவாளிகள் போல் நடத்தப்படுகிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

தற்போது ஜனநாயக மரபுகள் புறக்கணிக்கப்பட்டு, கொடுங்கோண்மை அதிகாரம் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், எழுத்துப்பூர்வமான எந்த உத்தரவும் இல்லாமல் தாங்கள் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறோம் என்று கூறினார்.

தாங்கள் கற்களை வீசும் கும்பலை சேர்ந்தவர்களோ, கொலையாளிகளோ கிடையாது என்றும் சட்டத்தின்மீது நம்பிக்கை கொண்ட தாங்கள் துப்பாக்கி கலாச்சாரத்தை எப்போதுமே தேர்வு  செய்ததில்லை என தெரிவித்தார்.
காந்தியின் பாதையை மட்டுமே நாங்கள் பின்பற்றி வந்திருப்பதாகவும் கூறிய அவர், இப்போது இப்படி நடப்பது ஏன்? அதற்கான காரணம் என்ன?  என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts