காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது : டிரம்ப்

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மீண்டும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

பிரான்சில்  நடைபெற்ற ஜி 7  மாநாட்டில் அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து  பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரம்  உள்நாட்டு சம்பந்தப்பட்டது என்பதால் அமெரிக்கா தலையிடாது என டிரம்ப் கூறினார். இந்த சந்திப்பு நடந்து 3 நாட்கள் ஆன நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து தகவல் தொடர்பு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்புக்காவல்கள் குறித்து அக்கறை கொண்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேநேரம், ஜம்மு-காஷ்மீர் விரைவில் ஒரு சாதாரண அரசியல் நிலைக்கு திரும்பும் என்ற பிரதமர் மோடியின் அறிக்கையை வரவேற்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டுடன், அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்கவும், அனைத்து தரப்பினரையும் அழைப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் தடைகளை  நீக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் “மக்களுக்கு ஏற்றத்தாழ்வான தீங்குகளை  விளைவிப்பதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், பெரிய அளவிலான வன்முறைகளைத் தடுக்கவும், பயங்கரவாத அச்சுறுத்தல்களைத் தணிக்கவும் கட்டுப்பாடுகள் அவசியம் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.

Related Posts