காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாரார் : மீண்டும் ட்ரம்ப்

இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய, மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக டிரம்ப் கடுமையான முயற்சி எடுத்து வருவதாக பாராட்டினார். இந்தச் சூழலில், ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேற்று சந்தித்தார். அப்போது காஷ்மீர் விவகாரம் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பதால், அமெரிக்காவுக்கு இதில் தலையிட வேண்டிய பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில் உதவ தயாராக இருப்பதாகவும், இந்தியாவும் இதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே மத்தியஸ்தம் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய பிரதமர் மோடியுடனும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனும் தம்முடன் நல்ல நட்புறவு இருப்பதாகவும், காஷ்மீர் விவகாரத்தில் தம்மால் நல்ல மத்தியஸ்தராக இருக்க முடியும் என்றும் கூறினார்.

Related Posts