காஷ்மீர் விவகாரம் : சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த  மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த விவகாரத்தில் இந்திய அரசை பாகிஸ்தான் கடுமையாக விமர்சனம்  செய்து வருகிறது. இருநாடுகள் இடையிலான தூதரக உறவு, ரெயில் சேவை, பேருந்து சேவை, வர்த்தக உறவை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்,  இந்தியாவில் பிரதமர் மோடி  தலைமையிலான அரசு, சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாகவும், அவரது அரசின் செயல்பாடுகள், பாகிஸ்தானுக்கும், இந்தியாவில் வாழும்  சிறுபான்மையினருக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் இந்தியாவிடமுள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை, சர்வதேச நாடுகள் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிடுவதற்காக பாகிஸ்தான் சீனா மூலமாக மேற்கொண்ட முயற்சியும் வெற்றியடையவில்லை.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என உலக நாடுகளும், ஐ.நா.வும் கூறியுள்ளது. இந்திய அரசு இனி பேச்சுவார்த்தையென்றால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமாகதான் இருக்கும் என தெரிவித்த்து

இதற்கிடையே பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க  முடியாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts