காஷ்மீர் விவகாரம் : நாடு முழுவதும் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், காவல்துறை இயக்குநர்கள், டெல்லி காவல் ஆணையர் ஆகியோருக்கும், பாதுகாப்பு படைகள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகள்போன்ற அமைப்புகளும் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட காவல் துறையினருக்கும் கண்காணிப்பிலும், பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி திரிபாதிமண்டல ஐஜிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடக்கலாம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டுதலங்களிலும் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிக்க 4 கூடுதல் டிஜிபிக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts