கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தூர் : மே-04

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியில் எல்லா வீரர்களும் நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர். இதுவரை 7 ஆட்டத்தில் ஆடியுள்ள பஞ்சாப் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் நல்ல நிலையில் உள்ளது. 3 முறை சாம்பியனான மும்பை அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts