கிடுகிடு என உயரும் வெங்காயம் விலை

சென்னை உள்பட தென் மற்றும் வட மாநிலங்களில் வெங்காயம் விலை கிடுகிடு என உயர்ந்து ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள லசல்காவோனில்  நாட்டிலேயே மிகப்பெரிய மொத்த விலை வெங்காய சந்தை அமைந்துள்ளது. இங்கு வெங்காயத்தின் விலை ஒரு குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்தது. இது 4 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும்.  சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 35 ரூபாய்க விற்கப்பட்ட நிலையில் இன்று திடீரென விலை உயர்த்தப்பட்டு 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. முன்பு ஒரு மூட்டை வெங்காயத்தின் விலை 1400 ரூபாயாக விற்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு மூட்டையின் விலை 2 ஆயிரத்து 200 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது..

Related Posts