கியூபாவில் விமானம் கீழே விழுந்து விபத்து: 100க்கும் மேற்பட்டோர் பலி

 

 

கியூபாவில் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில்,  100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக விமானம் ஒன்று, 104 பயணிகளுடன் புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, கட்டுப்பாட்டை இழந்த விமானம், விமான நிலையத்தின் அருகிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் 101 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 3 பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கியூபா நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து அறிந்த கியூபா அதிபர் மிகேல் தியாஸ் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். விபத்துக்குள்ளான அந்த விமானம் கடந்த 1979-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது எனவும், கடந்த 39 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts