கியூபா விமான விபத்து – பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு

கியூபாவில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

கியூபா : மே-22

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. 113 பேர் பயணம் செய்த இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விமான விபத்தில் 110 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் 3 பேர் மட்டும் மீட்கப்பட்டு ஹவானாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

Related Posts