கிரகத்தில் வசிக்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் சீனாவில் பூங்கா

சீனாவில் வேறொரு கிரகத்தில் வசிக்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பூங்கா, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சீனா : மே-03

வெர்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சீனாவின் குயிசூ மாகாணத்தில் பொழுதுபோக்கு பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. குயாங் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முப்பரிமாண தோற்றத்தை உண்டாக்கும் கண்ணாடி வழங்கப்படுகிறது. இதனை அணிந்துகொண்டு அந்த பூங்காவில் உள்ள பகுதிகளில் சுற்றி வரும்போது வேறொரு கிரகத்தில் நாம் வசிப்பது போன்ற உணர்வு ஏற்படும். பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், அதனை அதிகரிக்கும்நோக்கில் இந்த புதுமையான முயற்சியை செய்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Posts